அரசியல் தமிழகம்

அவருக்காக வருத்தத்தில் இருக்கும் உங்களுக்கு,அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என தெரியுமா? பரபரப்பை கிளப்பிய தலைமை நீதிபதி .!

Summary:

அவருக்காக மிகுந்த வருத்தத்தில் இருக்கும் உங்களுக்கு,அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என தெரியுமா? பரபரப்பை கிளப்பிய தலைமை நீதிபதி .!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக உடல் நலம் மோசமாகி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் அவர் உடல் நலம் சீராகி நலத்துடன் இருக்க  பிரார்த்தனை செய்து கொண்டும்,அவரது கையசைவை காணவும்  பல தொண்டர்கள் கண்ணீருடன்   காவேரி மருத்துவமனை முன்பு இரவும் பகலும்காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும்,பல பிரபலங்களும்  அவரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.  

அதுமட்டுமின்றி பல்வேறு  கருத்து வேறுபாடுகளும், கொள்கை வேறுபாடுகளும் கொண்டு திமுகவை பரம எதிரியாக கருதும் அதிமுக அமைச்சர்களும் ,முதலமைச்சர் பழனிசாமியும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

  

இந்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்கு  தமிழர்கள் அனுதாபம் காட்டுகின்றனர்.

ஆனால் கருணாநிதி அரசியலில் நுழைவதற்கு முன்பு அவருக்கு சொத்து மதிப்பு எவ்வளவு? தற்பொழுது அவரது துணைவியர், மகன் ஸ்டாலின், மாறன் சகோதரர்கள், கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? என கேட்கவேண்டும். காமராஜர் மறைவின்போது அவரது பெயரில் எந்த சொத்தும் இல்லை.என்ன ஒரு வித்தியாசம்! என கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

         

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Advertisement