ஊரடங்கு உத்தரவு விரக்தி..! மதுபானம் கிடைக்காததால் மனோரமா மகன் செய்த பகீர் செயல்..! கதறும் குடும்பத்தினர்.!

ஊரடங்கு உத்தரவு விரக்தி..! மதுபானம் கிடைக்காததால் மனோரமா மகன் செய்த பகீர் செயல்..! கதறும் குடும்பத்தினர்.!


manorama-son-eat-sleeping-tablets-for-not-having-alcoho

மதுகிடைக்காத விரக்தியில் மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் மகன் பூபதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் சிச்சை பெற்றுவருகிறார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் குடிக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஆட்சி மனோரமா.  பெண் நடிகைகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதா பாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிர் இழந்தார் மனோரமா.

corono

மனோரமாவுக்கு பூபதி (65) என்ற ஒரு மகன் உள்ளார். ஒருசில படங்களில் நடித்துள்ள இவர் பெரிய அளவில் சினிமாவில் சோபிக்கவில்லை. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார் பூபதி. தாயின் மறைவுக்கு பின் தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் வசித்துவந்த பூபதி கடந்த 6-ம் தேதி இரவு உடல்நிலை மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவரும் நிலையில், பூபதியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், குடிக்கு அடிமையான பூபதி, மது கிடைக்காத விரக்தியில் சரியான தூக்கம் இன்றி தவித்துள்ளார். இதனால், தூங்க வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளை உட்கொண்டதாக தெரியவந்துள்ளது.