மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
EMA விவகாரம்... பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் ஜோடி போட்டு தாக்குதல்... ஒருவர் கைது.! 4 பேர் தப்பி ஓட்டம்.!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தப்பி ஓடிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான தங்கராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் தங்கராஜ் நல்லூர் பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய அவர் மனைவியுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார். இன்று காலை 6:00 மணிக்கு அங்குள்ள டீக்கடை ஒன்றில் தங்கராஜ் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தங்கராஜ் திருமணம் மீறிய உறவில் இருந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் தங்கராஜை சரமாரியாக தாக்கியதோடு டீக்கடையில் இருந்த பொருள்களையும் நாசம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தங்கராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.