முதலில் நட்பு.. பின் காதல்.. அவசர அவசரமாக நடந்த திருமணம்.. கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

முதலில் நட்பு.. பின் காதல்.. அவசர அவசரமாக நடந்த திருமணம்.. கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!


man-threatened-to-expose-nude-pictures-if-women-didnt-give-money

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கண்டபட்டியை சேர்ந்தவர்கள் சாலமோன்,ஜான்சன் மற்றும் மனோசேட். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர்கள் மூவரும் கிடைக்கும் சின்ன வேலைகளை மட்டும் பார்த்து வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இளம்பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி அவர்களிடமிருந்து பணம் பறிப்பதை தனது முழு நேர வேலையாக பார்த்து வந்துள்ளனர். அதேபோல் முக்கூடல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் முதலில் நட்பாக பழகி பின் அந்த பெண்ணிடம் காதலிப்பதாக கூறியுள்ளார் சாலமோன்.

மேலும் சாலமோனிடம் அந்த இளம்பெண் அடிக்கடி வீடியோ கால் செய்து பேசி வந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை வீடியோ காலின் மூலம் ஆபாசமாக படம் எடுத்து அதனை அந்த பெண்ணிடம் காட்டி அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார்.

Naillai

ஆனால் சாலமோன் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் வேறு வழியில்லாமல் தனது பெற்றோரிடம் இளம்பெண் கூறி உள்ளார். அதனை அடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் அவசர அவசரமாக அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் கோபமான சாலமோன் தனது நண்பர்களை அழைத்து கொண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த பெண் பணம் இல்லை என்று கூறியதை அடுத்து அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

அதன்பின் அந்த பெண் நடந்த விஷயங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சாலமோன், இளம்பெண்ணுடன் இருந்த ஆபாசப் படத்தை அவரது கணவர் மற்றும் மாமனாரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் வந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் கணவர் அந்த பெண்ணை அவரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அதன்பின் இளம்பெண்ணின் பெற்றோர் சேரன்மகாதேவி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிடம் புகார் அளித்தனர்.