ஊரடங்கு நேரத்தில் மதுவால் வந்த வினை! பரிதாபமாக போன உயிர்! இரண்டு குழந்தைகளுடனும் தவிக்கும் மனைவி!



man suicide for drunk ddict

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு மதுரா மேட்டூர் தெருவைச் சேர்ந்தவர் ராம்தாஸ் என்பவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், தமிழ்ச்செல்வி என்பவருக்கும் 2014ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர். கொரோனா காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக ராம்தாஸ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்த ராம்தாஸ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவந்துள்ளார் மதுக்கு அடிமையான ராம்தாஸ். இவர் ஊரடங்கு சமயத்திலும் மது குடித்து வந்ததால், நாங்கள் உங்களை தான் நம்பி இருக்கிறோம் ஏன் இந்த சமயத்திலும் குடிக்கிறீர்கள் என கேட்டு மனைவி தமிழ்ச்செல்வி அவரிடம் சண்டை போட்டுள்ளார். 

suicide

இதனால் கோபமடைந்த ராம்தாஸ், நான் அப்படிதான் குடிப்பேன் என்று கூறிவிட்டு குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார். இதனையடுத்து கோபத்தில், குழந்தைகளுடன் அறைக்கு சென்று தூங்கச் சென்றுவிட்டார் தமிழ்செல்வி. அதிகாலையில் திடீரென அந்தப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அப்போது கண்விழித்த தமிழ்செல்வி, வெளியே வந்தபோது கணவர் தூக்கில் தொங்கி கிடப்பதை பார்த்து அலறல் சத்தம் போட்டுள்ளார். 

தமிழ்செல்வியின் சத்தம் கேட்டு ராம்தாஸின் அப்பா மற்றும் உறவினர்கள் ஓடி வந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் உடனடியாக ராம்தாஸை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் ராம்தாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரை குடிக்கும் மதுவால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், இரண்டு குழந்தைகளுடன் வாழும் தமிழ்ச்செல்வி மிகுந்த வேதனையில் இருக்கின்றார்.