நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கழட்டிவிட வெளிநாட்டு மாப்பிளை செய்த மோசமான காரியம்! அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கழட்டிவிட வெளிநாட்டு மாப்பிளை செய்த மோசமான காரியம்! அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்!

கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவில் கேசவபுரம் பகுதியில் வசித்து வந்த 25 வயது இளம்பெண்ணிற்கு,  வெட்டூர்ணிமடம் எம்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த எபினேசர் என்ற இளைஞருடன் திருமணம் செய்ய  கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எபினேசர் வெளிநாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் எபினேசர் குடும்பத்தினர் வரதட்சணையாக பணம் மற்றும் நிலம் தருமாறு பெண் வீட்டில் கேட்டுள்ளனர். அவர்களும் அதனை கொடுப்பதாக ஒத்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் எபினேசருக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்த வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார்கள் எண்ணியுள்ளனர். இதற்கு எபினேசரும் ஒத்துக்கொண்டு, தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட  பெண்ணை குறித்து மிகவும் அவதூறாக கடிதம் ஒன்றை எழுதி,  அதனுடன் இளம்பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பதுபோல் மார்பிங் செய்து பெண் வீட்டாருக்கு அனுப்பியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் போலீசார் எபினேசர், அவரது தந்தை இஸ்ரவேல், தாயார் பிளாரன்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo