"கிரிக்கெட் விளையாட்டில் தகராறு..." பீர் பாட்டிலால் தாக்கி இலங்கை தமிழர் படுகொலை.!! 3 பேர் கைது.!!



man-murdered-srilankan-refuge-with-beer-bottle-over-cri

விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்  வசித்து வருபவர் ஸ்ரீஜெயச்சந்திர குமார்(26). தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடைன் வசித்து  வருகின்றார். இவர் பெயிண்டர் தொழிலில் பணியாற்றி வரும் நிலையில் வாரத்தின் 6 நாட்களும் வேலைக்கு சென்றாலும் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடுவதை பழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி குல்லூர் சந்தை நீர்த்தேக்கம் நுழைவாயில் அருகே ஜெயசந்திர குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்த நிலையில் ஜெயசந்திர குமாரின் நண்பரான நித்திய குமாருடன் கிரிக்கெட் விளையாடும் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தகாத வார்த்தையில் திட்டிக் கொண்டனர். அங்கிருந்த சக நண்பர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.

tamilnadu

இந்த சண்டை நடந்து 1 வருடமாகியும் அந்த அவமானத்தை மறக்காத நித்திய குமார், ஜெயச்சந்திர குமாரை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளார். இதன்படி அக்டோபர் 5ம் தேதி ஜெயச்சந்திர குமாரை மது பாட்டிலால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இவருக்கு ரஞ்சித், கோகுல ரமணன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: மகள் மனைவி.. தாய் ஆசைநாயகி.. மருமகன் செய்த அட்டூழியம்.. கொன்று போட்ட பெண்கள்.!

இதற்கடுத்து ஜெயச்சந்திர குமாரின் உடலை பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்து குற்றவாளிகளான 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மது போதை தகராறு... முதியவர் மிதித்து கொலை.!! சிறுவன் உட்பட 2 பேர் கைது.!!