தங்கை உறவு முறை என்று கூட பாராமல் நீடித்த கள்ளக்காதல்.! இடையில் புகுந்த வாலிபர்.! பாடம் புகட்டிய கள்ளக்காதலன்.!

தங்கை உறவு முறை என்று கூட பாராமல் நீடித்த கள்ளக்காதல்.! இடையில் புகுந்த வாலிபர்.! பாடம் புகட்டிய கள்ளக்காதலன்.!


man killed women for illegal affair

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சோனாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். பார்வதியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவருடன் பார்வதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் பார்வதி முருகனுக்கு தங்கை உறவு முறை ஆகும். முருகனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டநிலையில், முருகன், பார்வதி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பார்வதி, தங்கை உறவு முறை என்று கூட பாராமல் உல்லாசமாக இருந்து வந்தார். கடந்த 10 வருடங்களாக இவர்களின் கள்ளக்காதல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் பார்வதிக்கு, வேறு ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முருகன் பல முறை பார்வதியை கண்டித்தும் அவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அந்த வாலிபரிடம் கள்ளத்தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் நேற்று காலை பார்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த பார்வதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முருகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.