தமிழகம் காதல் – உறவுகள்

திருமணம் மட்டும் வேண்டாம்! மறுப்பு தெரிவித்த பெண்.! தகர கொட்டகைக்குள் கறிக்கடைக்காரர் அரங்கேற்றிய வெறிச்செயல்!

Summary:

Man killed his illegal lover for not marry her

கோயம்புத்தூர் மாவட்டம் நேருநகர்  பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி திலகவதி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சக்திவேல் மற்றும் திலகவதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் திலகவதிக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்த, பத்மநாபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அப்பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

மேலும் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியநிலையில், இருவரும் அடிக்கடி சந்தித்து நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் பத்மநாபனுக்கு, திலகவதியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதுகுறித்து அவர் திலகவதியிடம் கூறியநிலையில் அவர் ஒரு சில காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார்.இந்த நிலையில் திலகவதிக்கு வேறு நபருடன் தொடர்பு இருக்குமோ, அதனால்தான் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாரோ என பத்மநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அவர் கடந்த சில தினங்களுக்கு  முன்பு திலகவதியை வழக்கமாக சந்திக்கும் தகர கொட்டகைக்கு வர கூறியுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பத்மநாதன் அருகிலிருந்த சுத்தியலால் திலகவதி அடித்த கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில் தனது மகளை காணவில்லை என திலகவதியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தகரக் கொட்டகைக்குள் இருந்து  திலகவதி மற்றும் பத்மநாபனின் உடல் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement