தமிழகம்

தூக்க கலக்கத்தில் படிக்கட்டு என நினைத்து இறங்கிய நபர்.! நள்ளிரவில் நடந்த பரிதாபம்.! துயரச் சம்பவம்.!

Summary:

சேலம் மாவட்டம் வெள்ளையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மற்றும் இவரது மருமகன் கோவிந்

சேலம் மாவட்டம் வெள்ளையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மற்றும் இவரது மருமகன் கோவிந்தராஜ். இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்தநிலையில் இவர்கள் இருவரும் ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் மொட்டை மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த ஆறுமுகம் தூக்க கலக்கத்தில் எழுந்து கீழே இறங்குவதற்காக மாடிப்படி என நினைத்து அடி எடுத்து வைத்துள்ளார். அப்போது மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். 

இதில் தலையில் அடிபட்டு் ஆறுமுகம் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் அப்பகுதியில் சென்றவர்கள் சடலமாக கிடந்த ஆறுமுகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement