டிக்டாக் வீடியோ ஆசை..! உயிர் மீனை விழுங்கி வீடியோ..! தொண்டைக்குள் மீன் சிக்கி சில நொடிகளில் உயிரிழந்த இளைஞர்..!Man dead while doing tik tok video fish struck in stomach

டிக் டாக் வீடியோ செய்யும் போது உயிர் மீன் வாய்க்குள் விழுந்ததில் நபர் ஒருவர் மூச்சு திணறி உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் கட்டிட வேலை பார்த்துவரும் வெற்றிவேல் (22). இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதில் ஒரு மகன் உள்ளநிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

Mysterious

மீன் பிடித்துக்கொண்டே டிக் டாக் வீடியோ வெளியிட முயற்சித்த வெற்றிவேல் உயிர் மீனை பிடித்து விழுங்குவதுபோல் வீடியோ எடுத்துள்ளார். அப்போது உயிர் மீன் துள்ளி குதித்து வெற்றிவேலின் வாய்க்குள் விழுந்து சுவாச குழலை அடைதுள்ளது. இதனால் மூச்சு திணறல் அதிகமாகி வெற்றிவேல் அங்கையே மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவரது நண்பர்கள் வெற்றிவேலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வெற்றிவேலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடரபாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசரனை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.