தமிழகம்

ஐய்யோ..!! 5 லட்சம் போச்சே..!! கணவனின் விபரீத முடிவால் தவிக்கும் மனைவி மற்றும் 2 குழந்தைகள்..

Summary:

ஐய்யோ..!! 5 லட்சம் போச்சே..!! கணவனின் விபரீத முடிவால் தவிக்கும் மனைவி மற்றும் 2 குழந்தைகள்..

ஆன்லைன் சீட்டு விளையாட்டில் 5 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாளையக்காடு கோல்டன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (37). திருமணம் முடிந்து இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சுரேஷ் தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சுரேஷின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சுரேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், ரேஷ், ஆன்லைன் மூலமாக சீட்டு விளையாடி வந்ததாகவும், வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஆன்லைன் சீட்டு விளையாட்டில் இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும், தற்கொலைக்கு முன் சுரேஷ் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், "டு கட்ட வைத்திருந்த பணத்தை ஆன்லைனில் சீட்டு விளையாடி இழந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மனைவி, குழந்தைகளை காப்பாற்றுங்கள். கடன் பிரச்சினையால் இந்த முடிவை எடுக்கிறேன்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement