தமிழகம்

பெண் போலீசை திருமணம் செய்துவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான கணவன்!

Summary:

man cheated women police

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் தங்கராணி என்பவர் பெண் போலீசாராக  பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் பக்கத்துக்கு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும், சிவ பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் திருமணமான நிலையில் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில், சிவ பிரேம்குமார் தங்கராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மற்றும் 10 சவரன் நகைகளை வாங்கியுள்ளார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனால், தங்கராணி, சிவபிரேம்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படும் 7 லட்ச ரூபாய் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அனால் பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்ததுடன் தங்க ராணியை தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்தபித்த தங்கராணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரளித்த புகாரின்பேரில் போலீசார், பெண்கள் வன்கொடுமை ,மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.
 


Advertisement