BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"அவ பிணம் வாசல்ல கிடக்கு எடுத்துக்கோங்க..." மருமகளை குத்திக் கொன்ற மாமனார்.!! வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார்.!!
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள குச்சனூரை சேர்ந்த துரைசிங்கம் தனது மகன் மற்றும் மருமகள் பேரன் பேத்திகளுடன், தேனி பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. நகரில் வசித்து வருகிறார். துரைசிங்கத்தின் மகன் சதீஷ் (வயது 37). இவர் மதுரையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சதீஷின் மனைவி ராஜபிரியா( 38), தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். சதீஷ் மற்றும் ராஜபிரியா தம்பதிக்கு 1 மகனும்,1 மகளும் உள்ளனர்.
சதிஷ், ராஜபிரியா தம்பதியிடையே நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை நடந்துள்ளது. இதையறிந்த சதிஷ் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சதீஷ், தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு குச்சனூரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் ராஜபிரியா அதே பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை ராஜபிரியாவை பார்க்க பழனிசெட்டிபட்டியில் உள்ள வீட்டுக்கு வந்த துரைசிங்கம் தனது மருமகளிடம் தகராறு செய்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜபிரியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ராஜபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு சென்ற துரைசிங்கம் தனது மருமகளை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்திருக்கிறார். மேலும் மருமகளின் கொலை செய்யப்பட்ட உடல் வீட்டு வாசலில் கிடப்பதாகவும் கூறி காவல் துறையினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ராஜ பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருமகளை, மாமனாரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் பயங்கரம்... எமானாக மாறிய சகலை.!! கள்ள காதல் படுகொலை!
இதையும் படிங்க: "ஜெயிலுக்கு போனா அவன் கூட போயிடுவியா..." கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!! பழ வியாபாரி கைது.!!