தமிழகம்

வீட்டிற்கு முன்பு நாய் சிறுநீர் கழித்ததால் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை!.

Summary:

man attacked girl for dog urine


சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு, இரவு தனது நாயுடன் அந்த தெருவில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியில் உள்ள சக்தி என்பவரது வீட்டின் முன்பு, நாய் சிறுநீர் கழித்தது. இதைகண்ட சக்தி, வீட்டிற்கு முன்பாக உங்களின் நாய் இவ்வாறு செய்யலாமா என சுகுணாவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சக்தி , அருகில் இருந்த பிளாஸ்டிக் குழாயால், தனது வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாய் மற்றும் அதனை நடைபயிற்சிக்கு அழைத்து வந்த சுகுணா இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து, சரமாரியாக தாக்கிய சக்தியை தடுத்து, சுகுணாவையும் மீட்டனர். இதனையடுத்து சக்தி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Advertisement