கணவனை இரையாக்க பாய்ந்த சிறுத்தை புலி.. பத்ரகாளியாக மாறி சிறுத்தையை ஓடவிட்ட வீரப்பெண்.!



maharashtra-ahmed-nagar-wife-saves-husband-form-leopard

வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டு இருந்த கணவரை சிறுத்தைப்புலி கொலை செய்ய முயற்சித்த நிலையில், மனைவி சிறுத்தையை விரட்டி கணவரின் உயிரை காத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகர் மாவட்டம், தைரோடி கிராமத்தில் வசித்து வருபவர் கோரக் தஷ்ரத் பவடே. இவரின் மனைவி சஞ்சனா (வயது 30). கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் வீட்டில் சஞ்சனா உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென எழுந்து பார்த்தபோது வீட்டின் வெளியே சிறுத்தைப்புலி நடமாடுவதை கண்டுள்ளார். 

இவரின் கணவர் வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், கணவரை காப்பாற்ற கதவை திறந்துள்ளார். அப்போது, சிறுத்தைப்புலியும் பெண்ணின் கணவரை நெருங்கி பாய்ந்து கடித்த நிலையில், சஞ்சனா கணவரின் உயிரை காப்பாற்ற சிறுத்தைபுலியின் வாலை பிடித்து இழுத்துள்ளார். மேலும், உதவிக்காக ஆட்களையும் அழைத்துள்ளார்.

maharashtra

சத்தம் கேட்டு வைத்த வளர்ப்பு நாயும் சிறுத்தையை தாக்கிய நிலையில், கோரக்கின் தந்தை கற்களை எடுத்து சிறுத்தைபுலியின் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் சிறுத்தைப்புலி விட்டால் போதுமென பாய்ந்து ஓடியுள்ளது. இதனையடுத்து, தலை மற்றும் கைகளில் காயம் அடைந்த கோரக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.