துக்கம் அனுசரிக்க சென்று வருகையில் சோகம்.. கணவன் - மனைவி தலைநசுங்கி மரணம்.!

துக்கம் அனுசரிக்க சென்று வருகையில் சோகம்.. கணவன் - மனைவி தலைநசுங்கி மரணம்.!


Madurai Usilampatti Couple Died an Accident

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் கணவன் மனைவி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, கருமாத்தூர் வி.கே.சி மஹால் எதிர்ப்புறம் உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மேல பொன்னகரம் பகுதியை சார்ந்த மோகன் மற்றும் அவர்களின் மனைவி பாண்டியம்மாள் ஆகிய இருவரும் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த செக்கானூரணி காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார். விசாரணையில், உயிரிழந்த உறவினரின் துக்க நீங்கள் வந்து ஆறுதல் தெரிவித்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி பயணம் செய்தபோது இருவரும் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.