தமிழகம் ஆன்மிகம்

சுபமுகூர்த்த நாளில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாயிலில் திருமணம்..!

Summary:

சுபமுகூர்த்த நாளில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாயிலில் திருமணம்..!

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக இருப்பது திருப்பரங்குன்றம். சூரனை வதம்செய்த முருகனுக்கு, இந்திரனின் மகளான தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொடுத்தனர். திருப்பரங்குன்றத்தில் அன்னை தெய்வானையோடு முருகன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

இதனால் மதுரை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தம்பதிகளுக்கு திருப்பரங்குன்றத்தில் வைத்து திருமணம் செய்து வைக்கப்படும். திருமண நாட்களில் 100 க்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நாளில் நடைபெறும். கோவில் வளாகத்திலும், திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டபத்திலும் என திருமண நாட்களில் திருப்பரங்குன்றம் விழாக்கோலம் பூண்டு இருக்கும். 

கொரோனா பரவல் காரணமாக மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இன்று சுபமுகூர்த்த நாளாக உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலில் அதிகாலையில் இருந்து வந்து பல்வேறு ஜோடிகள் திருமணம் செய்துகொண்டது. கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்பதால், கோவில் வாசலில் வைத்து திருமணங்கள் நடைபெற்றன. மேலும், கூட்டம் அதிகஅளவில் சேராமல் இருக்க, காவல் துறையினர் ஒவ்வொரு குழுவாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Advertisement