வனபத்ரகாளியம்மன் கோவில் கிடா வெட்டில் டமால்., டுமீல்... சரக்கு போதையில் பஞ்சாயத்து.. தட்டிதூக்கிய போலீஸ்.!

வனபத்ரகாளியம்மன் கோவில் கிடா வெட்டில் டமால்., டுமீல்... சரக்கு போதையில் பஞ்சாயத்து.. தட்டிதூக்கிய போலீஸ்.!


Madurai Thirumangalam Temple Festival Gun Fire

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் இருக்கும் காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் கிடா விருந்து நடைபெற்றது. இந்த கிடா விருந்தில் பலரும் கலந்துகொண்ட நிலையில், விருந்துக்கு வந்தவர்களில் கணபதி - தனசேகர் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த தகராறில் ஆத்திரமடைந்த தனசேகர், தன்னிடம் இருந்த ஏர் கன்னை உபயோகம் செய்து கணபதியை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். 

பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தனசேகரை கைது செய்துள்ளனர். அவரிடம் ஏர் கன்னுக்கான ஆவணம் குறித்தும், தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவரின் ஏர் கன் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.