பேராசிரியரின் குடி, கள்ளக்காதல் பழக்கத்தால் குடும்பமே காலி... மதுரையில் நடந்த பகீர் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி.!

பேராசிரியரின் குடி, கள்ளக்காதல் பழக்கத்தால் குடும்பமே காலி... மதுரையில் நடந்த பகீர் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி.!



Madurai THirumangalam Lecturer Family 4 Died 

 

மதுவும், மாதுவுடன் காமத்தினால் கொண்ட பழக்கமும் கட்டாயம் மரணத்தையே பரிசாக வழங்கும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் நடந்து இருக்கின்றன. ஆனால், ஆணின் தவறான நடந்தையால் குடும்பமே காலியான சோகம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், தொட்டியபட்டி பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் கரூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். செந்தில் குமாரின் மனைவி வீரச்செல்வி (வயது 36). இவர் மதுரை பேரையூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். 

தம்பதிகளுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, இருவருக்கும் தனுஸ்ரீ என்ற 13 வயது மகளும், நேகாஸ்ரீ என்ற 8 வயது மகளும் இருக்கின்றனர். குழந்தைகள் இருவரும் பள்ளியில் எட்டாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்கள். வீரச்செல்வி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருவதால், அனுப்பானடி பகுதியில் வீடு எடுத்து குழந்தைகளோடு தங்கி இருக்கிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் சுலைமான் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் இருக்கும் மரத்தில் செந்தில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த மனைவி கதறியழ, அவரது சகோதரர் தர்மராஜன் மற்றும் பெற்றோருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வீரச்செல்வி தானும், குழந்தையோடு தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து இருக்கிறார். 

madurai

அதிர்ந்துபோனவர்கள் வீரச்செல்வியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு தாழிட்டு இருக்க, அதனை உடைத்து உள்ளே சென்றபோது குடும்பமே உயிரிழந்தது அம்பலமானது. பின் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், செந்தில் குமார் கடந்த சில ஆண்டுகளாகவே வேலைகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், மனைவி வைத்துள்ள பணத்தை எடுத்துச்சென்று குடிப்பது, தவறான செயல்களில் ஈடுபடுவது, கள்ளக்காதல் வயப்பட்டு தொடர்பில் இருப்பது என இருந்துள்ளார். இதனால் வீரச்செல்வி - செந்தில் குமார் இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு உருவாகி இருக்கிறது. 

பலமுறை மனைவி அன்புற எடுத்துரைத்து கணவர் கள்ளக்காதல், மதுபழக்கத்தை கைவிடுவதாக தெரியவில்லை. இதனால் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், செந்தில் குமார் தற்கொலை செய்துகொள்ள, கணவர் உயிரை மாய்த்த தகவல் அறிந்து வீரச்செல்வியும் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.