தமிழகம்

நீண்ட நாட்களுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி.! அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!

Summary:

madurai meenatchi amman temple oppened

தமிழக அரசின் உத்தரவின்படி இன்று அனைத்து கோவில்களும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜை காலங்கள் நீங்கலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

5மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பல கோவில்களில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக திரண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக லட்டு பிரசாதம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உள்ளூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அங்கு வெப்பநிலை கணக்கிடுதல், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகுதான் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. 


Advertisement