இரயில் பயணிகள் கவனத்திற்கு.. சிறப்பு இரயில் பிப். 24 முதல் முழுவதும் இரத்து.. அறிவிப்பு.!
இந்தியாவில் உள்ள பல்வேறு இரயில் வழித்தடங்கள் மின்வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இதற்காக தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொல்லம் - புனலூர் இடையே இரயில் பாதை மின்மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

அதற்கான முதற்கட்ட பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழு வீச்சில் பணியை நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட சரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் கொல்லம் - புனலூர் இடையே இரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், கொல்லம் - புனலூர் இரயில் பாதை பிரிவு மின்மயமாக்கும் பணிகள் நடைபெறுவதால், செங்கோட்டை - கொல்லம், கொல்லம் - செங்கோட்டை (06659 / 06660) ஆகிய விரைவு சிறப்பு இரயில்கள் பிப். 27 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை முழுவதுமாக இரத்து செய்யப்படுகிறது என மதுரை இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
புனலூர் - கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்துவதற்காக செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை (06659/06660) விரைவு சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 15 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.@RailMinIndia @GMSRailway @pibchennai pic.twitter.com/v8GWHZAHGq
— DRM MADURAI (@drmmadurai) February 22, 2022