கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
மாரடைப்பால் உயிர்போகும் தருவாயிலும் பயணிகளின் உயிரைக்காத்த ஓட்டுநர் தெய்வம்.!
அரசுப்பேருந்து ஓட்டுநர் பயணத்தின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட, பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உயிரை இழந்தார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று காலை த.நா 58 என் 2399 பதிவெண் கொண்ட அரசு பேருந்து, 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நோக்கி பயணம் செய்தது.
பேருந்தை, பேருந்தின் ஓட்டுநர் ஆறுமுகம் என்பவர் இயக்கிய நிலையில், மதுரை காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றுகொண்டு இருந்தது. இந்நிலையில், ஓட்டுநர் ஆறுமுகத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பு வலியால் துடித்த ஓட்டுநர் ஆறுமுகம், சாலையின் எதிர்திசையில் வந்த பிற வாகனம் மீது பேருந்து மோதாமல் இருக்கும் வகையில், சாலையோரமாக பேருந்தை நிறுத்திவிட்டு அடுத்த நொடியே உயிரிழந்தார்.
இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் விபத்தில் இருந்து உயிர்தப்பினர். பேருந்து திடீரென நின்றதும், பேருந்து பயணிகள் மற்றும் நடத்துனர் ஓட்டுனரை கவனித்தபோதுதான், அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஓட்டுநர் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக மாற்று பேருந்து ஓட்டுனரும் அனுப்பி வைக்கப்பட்டு, பேருந்து சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
உயிர்போகும் தருவாயிலும் ஓட்டுநர் பயணிகள் மற்றும் பொதுமக்களின் உயிரை மதித்து, வாகனத்தை சுதாரித்து சாலையோரம் நிறுத்தி உயிரை விட்டுள்ளது அப்பகுதியினரிடையே பெரும் நெகிழ்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.