தமிழகம்

எம்.பி.வசந்த்குமாருக்கு கொரோனா நெகட்டிவ்... பொது மக்கள் அஞ்சலி செய்ய அனுமதி.!

Summary:

M. P vasanthkumar corona negative

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். 

இதனை தொடர்ந்து சுயநினைவு இழந்த நிலையில், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பிற்கு பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.

அதனையடுத்து வசந்த் குமார் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வசந்தகுமாரின் உடல் அவரின் சொந்த ஊரான நாங்குநேரியில் உள்ள அகதீஸ்வரத்தில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 


Advertisement