"நாட்டிற்கு 'காந்தி தேசம்' எனப் பெயரிட வேண்டும்" வழிமொழிந்த ஸ்டாலின்!!
நேற்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியானது கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் அனைவரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்கள். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவரது அதிகாரபூர்வ X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்:-
"அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி! வெறுப்புணர்வுக்கு எதிராக ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்!
அவரது வாழ்வின் பொருளை உணர்த்தவே, இந்த நாட்டிற்கே 'காந்தி தேசம்' எனப் பெயரிட வேண்டும் எனத் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.
அண்ணல் என்றும் மகாத்மா என்றும் இந்த நாடும் பாரும் போற்றும் நமது தேசத் தந்தை காந்தியாரின் பிறந்தநாளில், அவர் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது இலட்சியப் பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, #எல்லார்க்கும்_எல்லாம் என்ற இந்தியாவைக் கட்டமைப்போம்." என்று அவர் கூறியிருந்தார்.