அரசியல் தமிழகம் TN Election 2021

இந்த தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடித்த பேரதிஷ்டம்.! வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.!

Summary:

நேற்று தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர

நேற்று தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாக்களித்துள்ளனர். அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 பேர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு, அவருக்கே அவரது வாக்கை அளித்து கொண்டார்.

திமுக முதலமைச்சர் வேட்பாளராக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு க ஸ்டாலின்  தி.நகரில் அவரது வாக்கை செலுத்தினார். அ.ம.மு.க முதலமைச்சர் வேட்பாளராக கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் தனது வாக்கினை சென்னை அடையாறில் செலுத்தினார். 

அதேபோல் நாம் தமிழர் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விருகம்பாக்கத்தில்  வாக்களித்தார். அதேபோல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு, அவருக்கே அவரே வாக்களித்து கொண்டார்.


Advertisement