தமிழகம்

ப்ளீஸ் டி..! கெஞ்சிய காதலன்..! கண்டுகொள்ளாத காதலி.! 6 மாத காதலால் பரிதாபக இறந்த காதலி..! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Lover stabbed girl for refused to speak

பேச மறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்தியதும், மகளை காப்பாற்ற ஓடிவந்த தந்தையையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ். 22 வயதான ரதீஷ் அந்த பகுதியில் உள்ள மோட்டார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தநிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யா(18) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது.

இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரதீஸுடன் பேசுவதை திடீரென நிறுத்தியுள்ளார். தன்னிடம் பேசுமாறு ரதீஷ் பலமுறை கேட்டும் ஐஸ்வர்யா பேசாததால் நேராக அவரது வீட்டிற்கே சென்று தன்னிடம் பேசுமாறு ரதீஷ் வற்புறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ரதீஷ் ஐஸ்வர்யாவை பலமாக குத்தியுள்ளார்.  ஐஸ்வர்யாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தை ஓடிவர, அவரையும் கத்தியால் குத்திவிட்டு ரதீஷ் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தநிலையில் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை சிகிச்சை பெற்றுவருகிறார். வழங்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகா உள்ள ரத்தீஷை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement