தமிழகம் லைப் ஸ்டைல்

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை காதலியின் தங்கைக்கு அனுப்பிய வாலிபர்..! காதலியுடன் சேர்த்து அவரது தங்கைக்கும் கிடைத்த ஷாக்..!

Summary:

Lover send photos to lover sister in whatsapp

தனது காதலியை பழிவாங்க அவரது அந்தரங்க புகைப்படங்களை காதலன் காதலியின் தங்கைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் (29). இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனனர். இதனிடையே ரூபனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த இளம் பெண் ரூபனுடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரூபன் தாம் காதலிக்கும்போது எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ரூபன் காதலியின் புகைப்படங்களை அவரது தங்கைக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரூபனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement