தமிழகம்

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு..! தமிழகமே உச்சகட்ட எதிர்பார்ப்பு.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்த

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் 24 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். ஊரடங்கிற்கு பிறகும் கொரோனா பரவலின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. 

வரும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 31ம் தேதி வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிக்கலாமா.? வேண்டாமா.? என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் இன்று அறிவிப்பை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
 


Advertisement