லிப்ட் அறுந்து விழுந்து சோகம்.. 70 வயது மூதாட்டி தலை நசுங்கி பரிதாப பலி.!



Lift Accident in Chennai: 70-Year-Old Woman Dies After Elevator Falls From 3rd Floor

மூன்றாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்த நிலையில், மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

தனியார் உணவகம்: 

சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான பிரபலமான பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை இன்று காலை வழக்கம்போல செயல்பட்டு கொண்டு இருந்த நிலையில், திடீரென லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இதையும் படிங்க: ஆடி மாதத்தில் ஊருக்குச் சென்ற மனைவி.. பக்கத்து வீட்டுப்பெண் மீது ஆசைப்பட்ட கணவர்.. அடுத்து நடந்த பயங்கர சமபவம்.! 

விபத்து: 

இந்த விபத்தில் லிப்டில் இருந்த மூதாட்டி மும்தாஜ் (வயது 70) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 3 ஆண்டுகளாக மூதாட்டி அங்கு வேலை பார்த்து வந்த நிலையில், லிப்ட் மூன்றாவது தளம் நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென விபத்து நேர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மூதாட்டி தலை நசுங்கி உயிரிழந்தார். 

chennai

விசாரணை: 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக லிப்ட் பராமரிப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 'ஜனநாயகன்' கொடுத்த விழிப்புணர்வு.. சிக்கிய குற்றவாளி.!