நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!

நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!


Lessons for students through Tv

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்தநிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிற வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் கற்பிக்கும் ஒளிபரப்பை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

school students

கல்வி தொலைக்காட்சி வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம்  சிறப்பு கல்வி நிகழ்ச்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினிகளில் வீடியோ பாடங்களை தரவிறக்கம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.