
தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தமிழக டி
தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவலர்கள் உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு வாரம் ஒருநாள் விடுப்பு தரப்பட வேண்டும். மேலும், காவலர்களின் பிறந்தநாள், திருமண நாட்கள் போன்ற நாட்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார ஓய்வு தேவைப்படாத காவலர்கள் பணியில் இருந்தால் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்.பி தவறாமல் செயல்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை வாயிலாக டிஜிபி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement