என்னால சுத்தமா படிக்கமுடியல; எலி மருந்து சாப்பிட்டு உயிரைவிட்ட கல்லூரி மாணவர்..! பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!Layola college student eat rat poison and died

சென்னையில் உள்ள லயோலா கல்லூரி இந்தியாவிலேயே புகழ்பெற்ற பிரதானமான கல்லூரி ஆகும். திரை பிரபலங்களின் மகன்கள் உட்பட பலரும் இங்கு படிப்பது அந்த கல்லூரிக்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. 

திரைதுறையைச் சார்ந்த பலரும் இங்கு படித்து பின்நாட்களில் திரைத்துறையில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் வெற்றி கண்டவர்களே. இந்த நிலையில் லயோலா கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆண்டோ ஜாய் (வயது 24) என்பவர் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.

tamilnadu

இவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி எடுத்த நிலையில், படிப்பில் கவனம் செலுத்த முடியாத காரணத்தால் விபரீத முடிவு எடுத்துள்ளதாக விசாரணை நடத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.