தமிழகம்

தகுதி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!

Summary:

last date for exam


8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம் கடந்த 15ம் தேதி முதல் வழங்கப்படது. மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 5 என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பிப்பதில் இடையூறு ஏற்பட்டது என பலர் புகார் கூறியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 12 வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்தநிலையில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தமிழக பள்ளிகளில் எட்டம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான டெட் தேர்விற்கு விண்ணப்பிக்க மறந்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.


Advertisement