நகைகளை கொள்ளையடித்த முருகனுக்கு நன்றி கூறிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்!

Lalitha jewellery owner thank to theives


Lalitha jewellery owner thank to theives

கடந்த 2ம் தேதியன்று, திருச்சி லலிதா ஜுவல்லரி கட்டடத்தின் பின்புறச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அந்த கடையின் கீழ் தளத்துக்கு வந்து, அங்கே இருந்த தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான 28 கிலோ நகைகள் கொள்ளை போனதாக மதிப்பிடப்பட்டது.

கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், கொள்ளையர்கள் 2 பேர் முகமூடிகளை அணிந்து கொண்டு வந்துள்ளதும், ரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளை அணிந்து கொண்டிருப்பதும் பதிவாகியிருந்தது. மணிகண்டன், முருகன் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

lalitha jewellery

இந்தநிலையில் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண்குமார்இரண்டு நாட்களுக்கு முன்பு பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது.

அவருடன் பேசுவதற்கு 15 நிமிடமாவது கொடுங்கள் என கேட்டுள்ளார். இதனையடுத்து உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டுமே பேச அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் அங்கு அவர் பேசியதும் பதிவு செய்யப்பட்டது.

லலிதா ஜுவல்லரி உரிமையாளர் குற்றவாளியிடம், எனக்கு  நிறைய கிளைகள் உள்ளது. ஆனால் குறிப்பாக திருச்சியில் மட்டும் வந்து கொள்ளையடிக்க என்ன காரணம், மேலும் அந்த சுவற்றில் ஓட்டை போட்டால் நகை உள்ள இடத்திற்கு எப்படி வர முடியும் என்பது எப்படி தெரியும் என கேட்டுள்ளார்.

lalitha jewellery

அதற்கு குற்றவாளி கூறுகையில் நானும் எனது மனைவியும் பத்து முறைக்கு மேல் இந்த கடைக்கு  நகை வாங்க வந்துள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் என் மனைவி மட்டுமே நகைகளை பார்த்துக்கொண்டு  இருப்பாள். நான் கடையை மட்டுமே கவனித்து எப்படி கடைக்குள் வர முடியும் என்று திட்டமிட்டு பிறகு தான் உள்ளே வந்தோம் என கூறியுள்ளார்.

இவரது பதிலுக்கு நன்றி  என கூறிஉள்ளார் கடையின் உரிமையாளர். குற்றவாளி ஏன் சார் எனக்கு நன்றி கூறுகிறீர்கள் என கேட்டுள்ளான். எனது கவலை எல்லாம் இவ்வளவு பெரிய கடையில் காவலாளிகள் இருக்கும் இடத்தில் ஓட்டை போட்டு உள்ளே வர உனக்கு தைரியம் எப்படி வந்தது நிச்சயமாக கடையில் இருக்கும் யாராவது உதவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை குழம்ப வைத்தது.

 எனது கடையில் வேலை செய்பவர்கள் திருடும் அளவிற்கு செல்கிறார்கள் என்றால் என் மீது என்ன குறை இருக்கிறது அதை நான் உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கவலையாக இருந்தேன் அதனால் தான் அதை தெளிவு படுத்த பல முயற்சிகள் செய்து உன்னை சந்தித்தேன் என்றார். அவர் நன்றி கூறியதன் காரணத்தை கேட்ட அதிகாரிகளும், பொது மக்களும் அவருக்கு இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.