தனது பாட்டி என்றும் பாராமல் பேரன் செய்த காரியம்! அதிர்ச்சி சம்பவம்.!

தனது பாட்டி என்றும் பாராமல் பேரன் செய்த காரியம்! அதிர்ச்சி சம்பவம்.!


lady-murder

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மற்றும் இவருடைய மனைவி  தனலெட்சுமி.  இந்த தம்பதியினருக்கு  அஜித்குமார் (வயது 32) என்ற ஒரு மகன் உள்ளார் . சில வருடங்களுக்கு முன்பு அஜித் குமாரின் பெற்றோர்  இறந்துள்ள நிலையில், தனலட்சுமியின் தாய் செல்லம்மாள், கூலி வேலைக்குச் சென்று தனது பேரனை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில்  அஜித்குமார் வேலைக்குச் செல்லாமல், போதைக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இதனையடுத்து, அஜித் குமாரின் பாட்டியான செல்லம்மாள் வயது(92), இவர் கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வேலைக்குச் செல்லாமலே வீட்டிலே இருந்துள்ளார். இதனால் இருவரும், ஒரு வேளை சாப்பிட உணவின்றி தவிர்த்து வந்துள்ளனர்.பின்னர் பாட்டி படுத்த நிலையிலேயே இருப்பதை அறிந்த அஜித்குமார் ஆத்திரத்தில் தனது பாட்டியை 
வீட்டு வாசலில் வைத்து உயிரோடு தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆத்திரம் அடங்காத அவர் தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணியான நாய் மற்றும் அதன் குட்டியையும் எரித்துள்ளார்.

இவர் செய்த செயலை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு உடனே தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஜித் குமாரை கைது செய்து, எரிந்து கிடந்த அவரின் பாட்டியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக  அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர், போலிஸார் அவரிடம் விசாரணை  நடத்தியதில் அவர் கூறியதாவது, நான் வெளியில் சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்து பார்த்த போது பாட்டி இறந்த நிலையில் இருந்தார். அதைப் பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயிருந்தேன், அப்போது சாமி எல்லோரையும் எரிக்கச்சொன்னது. அதனால் தான் எரித்தேன் என்றார். மேலும் இது குறித்து போலிசார் இவரிடம்  விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.