#Breaking: ஏழை மாணவன் 3 மொழி படிப்பதில் என்ன தவறு? திமுக சிபிஎஸ்இ பள்ளியில் இந்தியை கைவிடுமா? எல்.முருகன் ஆவேசம்.!



L Murugan Pressmeet on 17 Feb 2025 


மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சாமி தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

மத்திய இணையமைச்சர் எல். முருகன் அளித்த பேட்டியில், " 40 ஆண்களுக்கு பின், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. திமுகவினர் நடத்தி வரும் பள்ளியில் இந்தி மொழியும் தான் கற்பிக்கப்படுகிறது. 

tamilnadu

புதியகல்விக்கொள்கை நோக்கம்

இலட்சத்தில், கோடியில் பணம் பெற்று, அவர்களே ஹிந்தி மொழியை தான் பள்ளிகளில் கற்பிக்கிறார்கள். சர்வதேச தரத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது. தாய்மொழியில் கல்வி வழங்குவதுதான் புதிய கல்விக்கொள்கையின் மிகப்பெரிய நோக்கம் ஆகும். 

இதையும் படிங்க: #Breaking: போதை ஆசாமியால் மீண்டும் அதிர்ச்சி.. சென்னை இரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் அத்துமீற முயற்சி.!

குழந்தைகள் தாய்மொழியில் மட்டுமே படிக்கச் வேண்டும் என்பதே அதன் அர்ப்பணிப்பு ஆகும். திமுகவினர் தாய்மொழியை வேண்டாம் என நினைக்கிறார்கள். திமுகவினர் பள்ளியில் ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. அதனை முடியாது என திமுகவினர் சொல்வார்களா? 

ஏழை மக்கள் படிக்கும் அரசுப் பள்ளியில் மும்மொழிக்கொள்கை வருவதில் என்ன பிரச்சனை? தமிழ், ஆங்கிலத்துடன் இன்னொரு மொழியை படிக்க வேண்டும்" என பேசினார்.
 

இதையும் படிங்க: பெரம்பலூர்: எக்ஸ்.எல் வாகனத்தில் 6 பேர் பயணம்.. நடந்த கோர விபத்து.. சிறுவன் பலி., 5 பேர் படுகாயம்.!