மீண்டும் ரயில் விபத்து.... குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் தடம் புரண்டு விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

மீண்டும் ரயில் விபத்து.... குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் தடம் புரண்டு விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!


kunoor-to-metupalayam-mountain-train-derailed-fortunate

தமிழ்நாட்டில் இருக்கும் கோடை வாசஸ்தலங்களில் முக்கியமானது ஊட்டி . கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கவும்  கோடைகால விடுமுறையை கொண்டாடவும் தமிழக மக்கள் பெரும்பாலும் செல்லும் இடங்களில் முதன்மையானது ஊட்டி மற்றும் குன்னூர் ஆகும். இங்கே சீசனை முன்னிட்டு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரையும் மலை ரயில் இயக்கப்படும் . இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு எப்போதுமே பயணிகள் கூட்டம் அலைமோதும்.

நீலகிரி மலையின் அழகை ரசித்தபடி செல்லும் இந்த ரயில்  இன்று தடம் புரண்ட சம்பவம்  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஊட்டி  மலை ரயிலின் இரண்டு  சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு இருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக எந்தவித பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.

kunoor

இதனைத் தொடர்ந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில்  ரயில்வே சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ரயில்வே விபத்துக்கள் நடைபெற்ற வாரி இருக்கின்றன.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள்  மற்றொரு ரயில் தடம் புரண்டு இருக்கிறது. நல்லவேளையாக சிறிய விபத்துடன் இது முடிவடைந்து விட்டது. எந்த ஒரு பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.