18 வயதில் மதுபானத்திற்கு அடிமை; தம்பியை கண்டித்த அக்காவுக்கு கிடைத்த இறுதி பரிசு.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!



Krishnagiri Sister Condemn Brother Drinking Habit Later He Suicide 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதக்கண்ணா கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராம். இவரின் மகள் சந்தியா, மகன் கோவிந்தசாமி. சந்தியாவுக்கு திருமணமாகி கணவருடன் சூடுதானஹள்ளி கிராமத்தில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், தனது அக்கா குடும்பத்தோடு தங்கியிருந்த கோவிந்தசாமி, அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தவறான சேர்க்கை காரணமாக கோவிந்தசாமி மதுபோதைக்கு அடிமையானதாக தெரியவருகிறது. 

நேற்று முன்தினம் அவர் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனைக்கண்ட சந்தியா மற்றும் அவரின் கணவர் சேர்ந்து, பெற்றோரை இழந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் வயதில் மதுப்பழக்கத்திற்கு எதற்கு அடிமையானாய்? என கேட்டு கண்டித்துள்ளனர். 

Krishnagiri

படிக்காமல் மதுபானம் அருந்தினால் நான் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்வேன் என சந்தியா தம்பியை மிரட்டி இருக்கிறார். இதனால் மனதளவில் உடைந்துபோன கோவிந்தசாமி, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், கோவிந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.