#Breaking: கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து;  5 பேர் பலி, 10 பேர் படுகாயம்.!

#Breaking: கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து;  5 பேர் பலி, 10 பேர் படுகாயம்.!



Krishnagiri Firecrackers Storage Explodes 5 Died 10 injured 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை பகுதியில் தனியார் நிர்வாகத்திற்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று வழக்கம்போல பணியாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்நிலையில், பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்படவே, 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

தீ விபத்தில் சிக்கியோரை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. குடோனின் உரிமையாளர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.