பட்டப்பகலில் தாய், மகள் வெட்டிக் கொலை... மர்ம நபர்கள் வெறி செயல்.!! போலீஸ் விசாரணை.!!



krishna-giri-shocking-crime-mother-and-daughter-duo-mur

கிருஷ்ணகிரி அருகே தனியாக இருந்த தாய் மற்றும் மகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட எல்லையம்மாள் (50) கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அருகே யாசின் நகர் பகுதியை சேர்ந்தவர். கணவர் இறந்துவிட்ட நிலையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவர்களது மகன் பெரியசாமி (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவருக்கு இரு மகள்கள் இருந்தனர். சுசிதா (13), சுசிகா (13), இரட்டையர்களாவர். இதில் சுசிகா விபத்தில் இறந்து விட்டார். தற்போது
சுசிதா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

tamilnadu

இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்த நிலையில் மதியம் சுகிதா வீட்டிற்கு சென்றுள்ளாள். தாய் மற்றும் மகள் தனியாக இருந்த நிலையில் நேற்று மாலை எல்லையம்மாள் வீட்டிற்கு அவரது தம்பி மனைவி சரோஜா சென்றுள்ளார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சோபாவில் எல்லையம்மாள் சடலமாக கிடந்தார். தாயின் அருகிலேயே சுசிதா தரையில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ந்து போன உறவுக்காரர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 6 வருஷங்களாக 14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கை! பெற்ற தாயே செய்ய கூடாததை மகளிடம் செய்த கொடூரம்! வெளிவந்த பகீர் உண்மை..

அவரது சத்தம் கேட்டு பக்கத்திலுள்ளவர்கள் வந்து பார்த்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.பி தங்கதுரை மற்றும் போலீசார் வந்து விசாரித்தனர். மர்ம நபர்கள் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை கொடூரமாக வெட்டியும் கழுத்தறுத்தும் படுகொலை செய்திருக்கலாமென போலீசார் சந்தேகித்துள்ளனர்.

மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் கொலை நடந்த வீட்டில் நகை, பணம் எதுவும் கொள்ளையடிக்க படவில்லை. இது தொழிலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணத்தால் நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இதையும் படிங்க: "மருமகளுடன் இருந்த தகாத உறவை நிறுத்தி விடு... " எச்சரித்த மாமனார்.!! அடித்தே கொலை செய்த கள்ளக்காதலன்.!!