BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
#Breaking: தாம்பரத்திற்கு தென்மாவட்ட பேருந்துகள் இனி செல்லாது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையை கொண்ட கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டு, வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் சென்னை பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் வசதிக்காக தற்காலிகமாக பேருந்துகள் தாம்பரம் வரை சென்று வர குறிப்பிட்ட இடைவெளியில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தென்மாவட்டத்தில் இருந்து தாம்பரம் வரையில் இயக்கப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளும், இனி தரம் செல்லாது. அதேபோல, தாம்பரத்தில் இருந்தும் பேருந்துகள் புறப்பட்டது.
இனி பேருந்து தாம்பரம் செல்லாது
நள்ளிரவு சுமார் 12 மணி முதல் வருகை தந்த பேருந்துகள் அனைத்தும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பேருந்து மாற்றம் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவலர்கள் கண்முன் நடந்த கொலை; தாம்பரத்தில் பரபரப்பு.. வழக்கறிஞர், சட்டக்கல்லூரி மாணவர் கைது.!
இதனால் தென்மாவட்ட பயணிகள் விழுப்புரம், சேலம், கும்பகோணம் கொட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தோடு நிறுத்தி வைக்கப்படும். கிளம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகர்களுக்கு செல்ல 589 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்பட்டன.
ஆனால், இனி வரும் நாட்களில் பேருந்துகள் தாம்பரத்திற்குள் செல்லாது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்குள் வழக்கமாக 589 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
தற்போதைய அறிவிப்பு காரணமாக கூடுதலாக 104 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பகீர்.. 16 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தல்.. பதறிய பொதுமக்கள்.. ட்விஸ்ட் வைத்த காவல்துறை.!