தமிழகம்

வண்டியை நிறுத்துங்க.. கையில் லெட்டருடன் ஓடிவந்த சிறுவர்கள்.. படித்துவிட்டு செல்பி எடுத்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்..

Summary:

நடிகர் மற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் சிறுவர்கள் சிலர் கொடுத்த கடிதம

நடிகர் மற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் சிறுவர்கள் சிலர் கொடுத்த கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

திமுக கட்சி சார்பாக அந்த கட்சியின் இளைஞரணிச் செயலாளர் மற்றும் நடிகரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிக்காக ஆண்டிப்பட்டி சென்றுவிட்டு நிகழ்ச்சி முடிந்ததும் காரில் கிளம்பினார்.

அவர் சென்றுகொண்டிருந்த கார் கன்னியப்பபிள்ளைப்பட்டி கிராமத்தின் அருகே சென்றபோது, அவருக்காக காத்திருந்த சிறுவர்கள் சிலர், கையில் துண்டு காகிதம் ஒன்றுடன் ஓடிவந்தனர். சிறுவர்கள் வருவதை பார்த்த உதயநிதி ஸ்டாலின், வண்டியை நிறுத்திவிட்டு சிறுவர்கள் கொடுத்த கடித்தை வாங்கி பார்த்தார்.

அதில், தாங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு பேட் தேவை என்றும், அதனை தாங்கள் வாங்கித் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், சிறுவர்களுக்கு பேட் வாங்கி தருவதாக கூறியதோடு, சிறுவர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement--!>