கையில் கட்ட கடிகாரம் ஆர்டர் செய்தால், "காண்டம்" அனுப்பிய சோகம்.. ஆடிப்போன இளைஞர்.!

கையில் கட்ட கடிகாரம் ஆர்டர் செய்தால், "காண்டம்" அனுப்பிய சோகம்.. ஆடிப்போன இளைஞர்.!


Kerala Ernakulam Man Order Time Watch Through Online but They Delivery 2 Condom

ஆன்லைன் வழியாக கைக்கடிகாரம் ஆர்டர் செய்த இளைஞருக்கு, பார்சலில் தண்ணீர் நிரப்பப்பட்ட காண்டம், உபயோகம் செய்யப்படாத புதிய காண்டம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், தட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 32). இவர் ஆன்லைன் மூலமாக கைக்கடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யும் போதே, கைக்கடிகாரத்திற்கான தொகையாக ரூ.2,400 செலுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஜன. 15 ஆம் தேதி கைக்கடிகாரம் வந்துவிடும் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பார்சல் வந்துள்ளது. பார்சலில் கைக்கடிகாரம் வந்துவிட்டது என ஆவலுடன் அதனை பிரித்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சியாக தண்ணீர் நிரப்பப்பட்ட ஆணுறை இருந்துள்ளது. 

KERALA

மேலும், மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தவர் பார்சலை கொண்டு வந்தவரிடம் கேட்கவே, பார்சலை டெலிவரி செய்வது மட்டும் தான் எனது வேலை. அதில் வந்த பொருள் குறித்து எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்புகொண்டு புகார் அளித்த நிலையில், அவர்களும் உரிய பதிலை அளிக்கவில்லை. இதனால் அனில்குமார் ஆலுவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.