நீங்கெல்லாம் நல்லா இருப்பீங்களாடா.. தமிழகத்தையே கொந்தளிக்கவைத்த கொடூர சம்பவம்! வேதனையுடன் பிக்பாஸ் கவின் வெளியிட்ட பதிவு!

Summary:

Kavin tweet about 7 year baby abuse

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது 7வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக  ராஜேஷ் என்ற 29 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டுமென பல தரப்பிலிருந்தும் குரலெழுந்து வருகிறது. மேலும் இத்தகைய கொடூர சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவருமான கவின் இதுகுறித்து மிகவும் ஆவேசமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்னும் எத்தனை ஹேஷ்டாக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடணும். அந்த குழந்தை மாஸ்க்லாம் போட்டு சிரிச்சுக்கிட்டே ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியலை. நல்லா இருப்பீங்களா நீங்களாம்.

ஒரு குழந்தையை கற்பழித்து கொல்வதைவிட பெரிய தப்பு  என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவனெல்லாம் பயப்படுற மாதிரி, இந்த தப்பெல்லாம்  செய்றவன் பயப்படனும் தானே.. அதற்காகவாவது ஒரு சட்டம் பொறக்க கூடாதா என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். 


Advertisement