அரசியல் தமிழகம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.! அதிரடியாக கைது செய்யப்பட காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி.!

Summary:

karur MP jothimani arrested

உத்திரப்பிரதேசத்தில் 19 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூர சம்பவத்தால் மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஹத்ரஸ் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியில் சுற்றத்தவாறும் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்னிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

ராகுல் காந்தியை காவல்துறையினர் லத்தியால் தாக்கியதாகவும் கீழே தள்ளி விட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அவர் தானாக தான் விழுந்தார் என்றும் கூறப்பட்டது. ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement