காபியில் மயக்க மருந்து கொடுத்து நண்பனின் மனைவியை சீரழித்த காமுகன்.. இறுதியில் நண்பனை கதறக்கதற கழுத்தறுத்த சுவாரசியம்..!
காபியில் மயக்க மருந்து கொடுத்து நண்பனின் மனைவியை சீரழித்த காமுகன்.. இறுதியில் நண்பனை கதறக்கதற கழுத்தறுத்த சுவாரசியம்..!

நண்பன் என வீட்டில் விட்டதற்கு மனைவியை பலாத்காரம் செய்த காமுகன், அதே நயவஞ்சகத்தால் வீழ்த்தி பரலோகம் அனுப்பி வைக்கப்பட்டான்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், காடுகோடி பகுதியில் 5-ம் தேதி சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கவரால் சுத்தப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் பீகாரை சார்ந்த ஓம் பிரகாஷ் சிங் என்பதும், பெங்களூரில் தங்கியிருந்து வியாபாரம் செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரின் செல்போன் அழைப்புகளை வைத்து ஓம் பிரகாஷ், விஷால் என்பவரிடம் அடிக்கடி பேசி வந்ததை உறுதி செய்தனர். விஷால் மற்றும் அவரின் மனைவி ரூபி பெலதூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் விஷால் தனது மனைவியுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றியது அம்பலமானது.
இதுகுறித்த வாக்குமூலத்தில், "பீகார் மாநிலத்தை சேர்ந்த விஷால் மனைவி ரூபியுடன் வசித்து வருகிறார். அப்போது, விஷால் - ஓம் பிரகாஷ் இடையே பழக்கம் ஏற்பட்டு, அவ்வப்போது விஷாலின் வீட்டிற்கு ஓம்பிரகாஷ் வந்து சென்றுள்ளார். விஷால் வீட்டில் இல்லாத நேரத்தில் காபியில் மயக்க மருந்து கலந்த ஓம் பிரகாஷ், விஷாலின் மனைவி ரூபியை பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து ரூபியிடம் காண்பித்துள்ளார்.
இதனால் பயந்துபோன ரூபியும் ஓம் பிரகாஷின் இச்சைக்கு பலியாக, விசயம் அரசல் புரசலாக விஷாலின் காதுகளுக்கு சென்றபோது இருவரும் கள்ளக்காதல் வயப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஓம் ப்ரகாஷிடம் இருந்து விஷால் ரூ.6 இலட்சம் கடன் வாங்கியிருந்த நிலையில், அந்த பணத்தை கேட்டு ஓம் பிரகாஷ் தொந்தரவு செய்துள்ளார்.
இதனையடுத்து, விஷால் - ரூபி பேசி முடிவு செய்து ஓம் பிரகாஷை கொலை செய்யும் திட்டம் தீட்ட, சம்பவத்தன்று ஓம் பிரகாஷை வீட்டிற்கு வரவழைத்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை சாக்கடையில் வீசி இருக்கின்றனர்" என்று தெரிவிப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விஷால், ரூபி ஆகியோரை கைது செய்தனர்.