இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
இருசக்கர வாகனம் - டாரஸ் லாரி மோதி பயங்கர விபத்து; போக்குவரத்து காவலர் பரிதாப பலி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்டின். இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சுங்கான்கடை பகுதியில் சென்றுகொண்டு இருந்தார்.
அச்சமயம் அவ்வழியே வந்த டாரஸ் லாரி, ஐஸ்டின் பயணம் செய்த வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜஸ்டின் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மறைந்த ஜஸ்டின் போக்குவரத்து காவலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.