தமிழகம்

வீட்டை விற்று சிகிச்சை பார்த்தும் பேரன் பிழைக்கவில்லையே.. மூதாட்டியின் விபரீத முடிவால் சோகம்.!

Summary:

வீட்டை விற்று சிகிச்சை பார்த்தும் பேரன் பிழைக்கவில்லையே.. மூதாட்டியின் விபரீத முடிவால் சோகம்.!

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த பேரனை காப்பாற்ற முடியாத ஏக்கத்தில், மூதாட்டி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தினவிளை பகுதியை சேர்ந்தவர் ரோசம்மாள். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். 

இதனால் தனது மகள்வழி பேரனான ஜெகனை தத்தெடுத்த மூதாட்டி ரோசம்மாள், பேரனை தனது பராமரிப்பில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஜெகனுக்கு திடீரென உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பேரனுக்கு சிகிச்சை பார்க்க தனது வீட்டினை விற்பனை செய்து மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டும் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேரனை இழந்த துக்கத்தில் இருந்து வந்த ரோசம்மாள், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement