தம்பி.. வந்து கை வச்சு பாரு.! எங்ககிட்டேவா.? நாங்க எழுந்தால் தாங்கமுடியாது.! எச்சரிக்கை விடுத்த கனிமொழி.!

தம்பி.. வந்து கை வச்சு பாரு.! எங்ககிட்டேவா.? நாங்க எழுந்தால் தாங்கமுடியாது.! எச்சரிக்கை விடுத்த கனிமொழி.!



kanimoli talk about annamalai

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தற்போது அரவக்குறிச்சி தொகுதியின் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். 

சமீபத்தில் வேட்பாளர் அண்ணாமலைக்காக நமீதா வாக்கு சேகரித்தார். அண்ணாமலையை திமுகவினர் தொந்தரவு செய்து வருவதாக நேற்றைய தினம் வாக்காளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, கர்நாடகாவில் எஸ்பியாக பணியாற்றியபோது பல பேரை மொத்தியுள்ளேன். இங்கு என்னை அரசியல் செய்ய விடாமல் செய்கிறீர்கள். 

செந்தில்பாலாஜி எல்லாம் ஒரு ஆளா? அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன். நான் ஐபிஎஸ் பதவியில் இருந்த காலத்தில் உன்னைப் போல் எத்தனையோ பிராடுகளை பார்த்து இருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதை வெளியே காட்ட வேண்டாம் என்று நினைக்கின்றேன். நான் வன்முறை இல்லாமல் நியாயமான அரசியல் செய்ய வந்துள்ளேன். என் மீது வன்முறையை திணித்து, நான் வன்முறை செய்ததாக மாற்ற வேண்டாம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

annamalai

அண்ணாமலையின் இந்த சர்ச்சை பேச்சு வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனக்கு இன்னொரு முகம் இருக்குனு சொல்கிறார். செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி., திமுக உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. திமுக எழுந்தால் யாரும் தாங்கமுடியாது, உங்களின் மிரட்டலை நிறுத்திக்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.